எங்களைப் பற்றி

அன்புடையீர்!

     2009ஆம் ஆண்டு செப்டம்பர் 15 அன்று எமது கௌதம் பதிப்பகம் துவங்கப்பட்டது. எமது பதிப்பகத்தின் இணையதளமாக இத்தளம் (www.gowthampathippagam.com) செயல்பட்டு வருகிறது.

     எமது பதிப்பகத்தில் வெளியிடப்பட்டுள்ள நூல்கள், அவற்றைப் பற்றிய விவரங்கள் ஆகியவை குறித்த தகவல்கள் உடனடியாக இத்தளத்தில் வெளியிடப்படுகிறது.

     எமது பதிப்பகத்தின் மூலம் பல தரப்பட்ட மக்களுக்கும் பயன் அளிக்கும் வகையில், நல்ல நூல்களை குறைந்த விலையில் பதிப்பித்து வெளியிட்டு வருகிறோம்.

     ஏற்கெனவே முன்பு எமது சென்னைநெட்வொர்க்.காம் இணைய தளத்தின் ஒரு பகுதியாக நாங்கள் வெளியிட்டு வந்த மின்னூல் குறுந்தகடுகள் இப்பதிப்பகத்தின் மூலம் தற்சமயம் வெளியிடப்படுகின்றன.

     வாசகர்கள் எமது கௌதம் பதிப்பகத்தின் நூல் வெளியீடுகளுக்கும், மின்னூல் குறுந்தகடு வெளியிடுகளுக்கும் தொடர்ந்து தங்களின் நல் ஆதரவை நல்குவீர்கள் என்று நம்புகிறேன்.

தங்கள் அன்பன்
கோ.சந்திரசேகரன்