கௌதம் பதிப்பகம் நூல்கள்

சாகாக்கலை ரகசியம் - பாகம் - 1. காகபுஜண்டர் பெருநூல் காவியம்

சாகாக்கலை ரகசியம் பாகம் 1 காகபுஜண்டர் பெருநூல் காவியம்
ஆசிரியர்: பிரம்மஸ்ரீ சே.சேவுகமூர்த்தி

பதிப்பு: அக்டோபர் 2024

விலை: ரூ.600/-

அஞ்சல் செலவு: சென்னை - ரூ.30/- இந்தியா - ரூ.50/- (வெளிநாடு: எம்மை தொடர்பு கொள்க) (ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.)

பக்கங்கள்: 534

பிரிவு: ஆன்மிகம்

ISBN: 978-81-981587-3-4

நூல் குறிப்பு: இந்நூலாசிரியர் பிரம்மஸ்ரீ சேவுகமூர்த்தி சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் பிறந்தவர். தந்தையார் சேது, தாயார் துளசி அம்மாள். சிறு வயதில் வறுமை காரணமாக இளம் பிராயத்திலேயே கடினமாக உழைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அச்சமயம் தந்தை மற்றும் அவரின் நண்பர்கள் உதவியுடன் சித்த மருத்துவத்தை கற்றார். பிறகு அக்குபஞ்சர் மருத்துவமும் பயின்று, இலங்கையைச் சேர்ந்த சர்வதேச திறந்த நிலை பல்நோக்கு மருத்துவ பல்கலையில் 5 வருட காலம் உதவிப் பேராசிரியராகவும் பணியாற்றினார். சிறு வயதில் பாபநாசம் அருகே அகத்தியர் பாதம் என்ற இடத்தில் சித்திரை அமாவாசை அன்று ஒரு யோகியினுடைய அருள்வாக்கு இவருக்கு கிடைத்தது. நீ தேடும் ஞானம் உன்னைத் தேடி வரும்’ என்ற அவரின் அருள் வாக்கு அப்படியே பலித்தது. ஞான பிதா சுவாமி சிவானந்த பரமஹம்சர் அவர்களால் அருளிச் செய்யப்பட்ட சித்த வித்தை, இவருக்கு வீட்டிலேயே வந்து தீட்சையாக கொடுக்கப்பட்டது. தாய் தந்தை மறைவிற்குப் பிறகு சுவாமி சிவானந்த பரமஹம்சர் இவரை முழுமையாக ஆட்கொள்ளவே, இவரின் வாழ்க்கையும் மாறத் துவங்கியது. இந்நிலையில் இவர் சித்தயோகி என்ற பெயரில் வலையொளி ஒன்றைத் தொடங்கி ஞானபிதா சுவாமி சிவானந்த பரமஹம்சர் உபதேசித்த சித்த வித்தை குறித்து சொற்பொழிவுகளை செய்யத் தொடங்கினார். ஏறக்குறைய ஏழு ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து வலையொளியிலே சித்தர் பாடல்களுக்கு விளக்க உரை வழங்குகிறார். இவருடைய உபதேச உரைகளை கேட்டு பலர் உள்நாடு மட்டுமல்லாது வெளிநாட்டிலிருந்தும் வந்து இவரிடத்தில் சித்த வித்தை என்கிற வாசியோகக் கலையை தீட்சை பெற்று பயிற்சி செய்து வருகிறார்கள். இவர் வலையொளியில் பேசிய சித்தர் பெருமக்களின் பாடல் விளக்கங்கள், தற்போது புத்தக வடிவில் இந்நூல் வாயிலாக வெளிவந்துள்ளது. தமிழ் கூறும் நல் உலக நண்பர்கள் இந்நூலை வாசித்து, இதன் உண்மையான அர்த்தத்தை புரிந்து, தெளிந்து, நற்கதியினைப் பெறுவார்களாக!

பணம் செலுத்தி நூல் வாங்க கீழ் பட்டனை சொடுக்கவும்

நூல் வாங்க!