கௌதம் பதிப்பகம் நூல்கள்

வெண்ணிற இரவுகள்

வெண்ணிற இரவுகள்
ஆசிரியர்: ஃபியோதர் தாஸ்தயேவ்ஸ்கி, தமிழில்: ரா. கிருஷ்ணையா

பதிப்பு: பிப்ரவரி 2024

விலை: ரூ.100/-

அஞ்சல் செலவு: சென்னை - ரூ.30/- இந்தியா - ரூ.50/- (வெளிநாடு: எம்மை தொடர்பு கொள்க) (ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.)

பக்கங்கள்: 90

பிரிவு: புதினம்

ISBN: 978-81-958193-4-8

நூல் குறிப்பு: 175 ஆண்டுகளுக்கு முன்பு 1848 ஆம் ஆண்டு ·பியோதர் தாஸ்தயேவ்ஸ்கி எழுதிய நாவல் இது. ரா. கிருஷ்ணையாவின் தமிழ் மொழிபெயர்ப்பு கவித்துவமான நடையில் அமைந்துள்ளது. உலகில் அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நாவலாகவும் அதிகம் வாசிக்கப்படும் நாவலாகவும் விளங்குகிறது இந்த அரிய காதல் கதை. ஆறு முறை வெவ்வேறு இயக்குனர்கள் இதை படமாக்கியிருக்கிறார்கள். இரண்டு ஆண்கள் ஒரு இளம் பெண். மூன்றே முக்கிய கதாபாத்திரங்கள். நான்கு இரவுகள் ஒரு பகலில் கதை முடிந்துவிடுகிறது. கதை முழுவதும் ஒரே இடத்தில் ஒரு ஆணும் பெண்ணும் சந்தித்துக் கொள்கிறார்கள். அவர்கள் இருவரும் காதலின் மீது அதீத நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். காதல் மட்டுமே தங்களுக்கான விடுதலை என்று உணர்கிறார்கள். காதல் அவர்களை பித்தேற்றுகிறது. முடிவில் அந்தப் பெண் காதலன் உடன் ஒன்று சேர்ந்து விடுகிறாள். அவளுடன் இருந்த பொழுதே வாழ்நாள் முழுமைக்கும் போதும் என மனநிறைவடைகிறான் ஆண். இப்படியாக வெண்ணிற இரவுகள் இரவின் ஊடாக அலைவுறும் மனித ஆசைகளை வெளிப்படுத்துகிறது. ஒவ்வொருவரும் அவசியம் படிக்க வேண்டிய படைப்பாக வெண்ணிற இரவுகள் மிளிர்கிறது.

பணம் செலுத்தி நூல் வாங்க கீழ் பட்டனை சொடுக்கவும்

நூல் வாங்க!