கௌதம் பதிப்பகம் நூல்கள் |
நந்தவனம் பதிப்பு: ஆகஸ்டு 2012 விலை: ரூ.70/- அஞ்சல் செலவு: சென்னை - ரூ.30/- இந்தியா - ரூ.60/- (வெளிநாடு: எம்மை தொடர்பு கொள்க) (ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ.500க்கும் குறைவாக நூல்கள் வாங்கினால் அஞ்சல் கட்டணம் கட்டாயம் செலுத்த வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட நூல்கள் வாங்கினால் ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.) பக்கங்கள்: 192 பிரிவு: சிறுகதை ISBN: 978-93-81134-35-1 நூல் குறிப்பு:‘நந்தவனம்’ என்கிற இந்தச் சிறுகதைத் தொகுதிக்குள் ஹேமா அவர்கள் மிக இயல்பான உரைநடையிலும் மிக மிகக் குறும்பு கலந்த உரையாடல்களிலும் நம்மை தம் முதல் முயற்சியிலேயே ஈர்த்து விடுகிறார், சிறு கதை ஆசிரியராக. அனைத்துச் சிறு கதைகளிலும் மாந்த நேயம் என்கிற சொல்லாணை மீறிய உயிர் நேய நெகிழ்வு நெஞ்சராக ஹேமா அவர்கள் சிறந்து நிற்கிறார்கள். (பாவலர் அறிவுமதி) சிறுகதை பற்றிய என்னுடைய பார்வையை என்னைப் போன்ற சராசரி வாசகனுக்கும் ஏற்படுத்திய தொகுப்பாக ‘நந்தவனம்’ உண்டாக்கியது. ஒவ்வொன்றையும் செதுக்கி செதுக்கி மிக நேர்த்தியான சிற்பம் போலச் செய்திருக்கிறார் ஹேமா. சுற்றி நடக்கும் நிகழ்வுகளை உன்னிப்பாக கவனித்து அவற்றை கதையின் சரளமான மொழியில் ஐக்கியப்படுத்தும் கலையாக அது மலர்ந்திருக்கிறது. ‘நந்தவனம்’ மேலோட்டமான, சம்பவங்களை மட்டும் பதிவு செய்த படைப்பு அல்ல. அது நுணுக்கமாக உணர்வுகளைப் படம் பிடித்த வாழ்வியல் சிதறல்களைத் தீட்டிய உண்மையான சித்திரம். (வெ. இறையன்பு) இத்தொகுப்பில், ஹேமாவின் தெளிந்த நீரோடை போன்ற இயல்பான எளிமையான இனிமையான நடை, குறும்பும் கிண்டலும் நகைச்சுவையும் கலந்து வாசகனை ஈர்க்கிறது. மனித நேயம், இயற்கை நேயம், எதிலும் நன்மை காணும் நோக்கு இவரது கதைகளின் பொதுப் பண்பாக விளங்குகிறது. தமிழ்ச் சிறுகதை வானில் புதிய தாரகையாகத் தோன்றியுள்ள ‘எழுத்தாளர் ஹேமா’ நன்கு பளிச்சிடுவார். (கி. தனவேல், இ.ஆ.ப.) பணம் செலுத்தி நூல் வாங்க கீழ் பட்டனை சொடுக்கவும் |
|
|
|