அஞ்சல் செலவு: சென்னை - ரூ.30/- இந்தியா - ரூ.50/- (வெளிநாடு: எம்மை தொடர்பு கொள்க) (ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.)
பக்கங்கள்: 136
பிரிவு: கட்டுரை
ISBN: 978-93-81134-22-1
நூல் குறிப்பு:இருபத்தாறு கட்டுரைகளைத் தாங்கி வரும் இந்நூல், வரிக்கு வரி அரிய தகவலை வெளியிடும் களஞ்சியமாக மின்னுகிறது. பெய்ஜிங் என்றால் சீனப் பெரு சுவர், தியான் அன் மென் சதுக்கம் என்பதை மாற்றி, அங்கு நாம் கண்டு களிக்க வேண்டிய இடங்களை அருமையாகப் பட்டியலிட்டு விளக்கியிருப்பது பாராட்டுக்குரியது.
பெய்குங் வனப் பூங்காவில், இசையொலி எழுப்பும் கற்கள் பற்றிய செய்தி புதிது. சூங் சான் வனப் பூங்காவுக்குச் சென்றால், விவசாயிகளின் இல்லங்களில் தங்கி, பழங்குடிக் காட்டை பார்த்து வரலாம். புகழ்பெற்ற வெப்ப ஊற்றைக் கண் குளிர கண்டுவரலாம். 1956 இல் நிறுவப்பட்ட பெய்ஜிங் தாவரவியல் தோட்டம் பற்றிய தகவல்கள் அருமை. சீஷல்ஸ் தீவிலிருந்து கொண்டு வரப்பட்டு, இங்கு விளையும் கடல் தேங்காய் பற்றிய செய்தி, ஆர்வத்தை துண்டுவதாக அமைகிறது.
சில கோயில்களையும் கலைமகள் நமக்கு அறிமுகப்படுத்துகிறார். 1300 ஆண்டுப் பழமை வாய்ந்த பா·யுவான் கோயில், புத்த மத நம்பிக்கையின் சின்னமாகச் சீனாவில் விளங்குவதை எடுத்துக் காட்டுகிறார்.
430 ஆண்டு வரலாறு கொண்ட வான்சாவ் கோயில், மன்னர் குடும்பக் கோயிலாக விளங்கிய வரலாற்றைப் பற்றிய அரிய தகவல்கள் தரப்பட்டுள்ளன. 1068இல் கட்டப்பட்ட தாச்சியே கோயில் சீனப் பண்பாட்டின் சின்னமாக இன்று வரை மிளிர்வது, யூலன் மலர் அந்தக் கோயிலின் சின்னமாக விளங்குவது ஆகியவற்றை இந்நூலின் வாயிலாக அறிய முடிகிறது. (முனைவர் கடிகாசலம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்)