உலக சினிமா - ஓர் பார்வை
ஆசிரியர்: குகன்
பதிப்பு: ஆகஸ்டு 2011
விலை: ரூ.50/-
தள்ளுபடி விலை: ரூ.45/-
அஞ்சல் செலவு: சென்னை - ரூ.30/- இந்தியா - ரூ.50/- (வெளிநாடு: எம்மை தொடர்பு கொள்க) (ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.)
பக்கங்கள்: 80
பிரிவு: கட்டுரை
ISBN: 978-93-81134-08-5
நூல் குறிப்பு:ஏழைகளுக்காக பணக்காரர்களால் தயாரிக்கப்படும் ஒரே பொருள் ‘சினிமா’. சினிமாவில் மட்டும் ஏழை பணக்காரனை முந்திச் செல்கிறான். காட்சிப்படுத்தும் போதாகட்டும், வசனம் எழுதும் போதாகட்டும், பாடல் இசை அமைக்கும் போதாகட்டும் அடித்தட்டு ரசிகர்களை மனதில் கொண்டு வடிவமைக்கப்படுகிறது.
பணக்காரர்களின் ஆதரவு இல்லை என்றாலும் அடித்தட்டு ரசிகர்களின் விசில் சத்தம் போதும் ஒரு படத்தை வியாபார ரீதியாக வெற்றி பெற வைப்பதற்கு. ஆனால் இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள படங்கள் வியாபாரத்திற்காக எடுக்கப்படவில்லை. தங்கள் நாட்டில் நடந்ததை பதிவு செய்யவும், வரலாற்று நிகழ்வுகளை நினைவு கூறவும், தனி மனித உணர்வுகள் கொல்லப்படுவதை விளக்கவும், எந்த வித ஒளிவு மறைவும் இன்றி காட்சிப்படுத்தி ரசிகர்களுக்கு விருந்தாக்கியுள்ளார்கள்.
பத்தொன்பது மாதங்களாக ‘கல்வெட்டு பேசுகிறது’ மாத இதழில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு தான் இந்த நூல். இந்த நூலின் ஆசிரியர் ‘குகன்’ இதுவரை ஆறு நூல்களை எழுதியுள்ளார். நான்கு நூல்களை தொகுத்து வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பணம் செலுத்தி நூல் வாங்க கீழ் பட்டனை சொடுக்கவும்
நூல் வாங்க!