http://www.gowthampathippagam.com
முகப்பு | எங்களைப் பற்றி | தொடர்புக்கு
நூல்/குறுந்தகடு வாங்க | நூல் வெளியிட


கௌதம் பதிப்பகம்

இலவச நூல் வெளியீடு - வழிமுறைகள்

அன்புடையீர்!

     உங்கள் தமிழ் படைப்புகளை நாங்கள் முற்றிலும் இலவசமாக வெளியிட்டு உதவ தயாராயிருக்கிறோம். இதன்மூலம் எழுத்தாளரான உங்களுக்கு புத்தகம் வெளியிடுவதில் உள்ள பல்வேறு சிக்கல்களை நாங்கள் ஏற்றுக் கொண்டு உங்களுக்கு உதவ உள்ளோம்.

     இலவச நூல் பதிப்புத் திட்டத்தின் மூலம் முதன் முதலாக முனைவர் துரை.மணிகண்டன் அவர்கள் எழுதிய "இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்" என்ற நூல் வெளியிடப்பட்டுள்ளது என்பதை வாசகர்களுக்கு மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

     முதலில் உங்கள் நூலைப் பற்றிய சிறு குறிப்பை (ஒரு பக்கத்திற்கு மிகாமல்) மின்னஞ்சல் மூலமோ அல்லது தபால் மூலமோ அனுப்பி வைக்கவும். அது எங்களுக்கு பிடித்திருந்தால் முழு நூலின் தெளிவான கையெழுத்துப் பிரதியையோ, அல்லது தட்டச்சு செய்த பிரதியின் நகலையோ அனுப்பி வைக்கவும். இது தங்களுக்கு திருப்பி அனுப்பப் படாது. ஆகவே மூலப் பிரதியை அனுப்ப வேண்டாம். தங்களிடமே வைத்துக் கொள்ளவும். தங்கள் நூலின் அளவு டெம்மி நூல் அளவில் 90 பக்கங்களுக்கு மிகாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். இந்த முழு நூலும் எமது குழுவினரின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்படும். எமது குழு தங்கள் நூலை வெளியிட ஒப்புதல் அளித்த பிறகு தங்களுக்கு கடிதம் / தொலைபேசி / மின்னஞ்சல் மூலம் உடனடியாக தெரியப்படுத்தப்படும்.

     நூல் அச்சிடுவதற்கு தேர்வானதும், தங்களின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், தங்களைப் பற்றிய ஆசிரியர் குறிப்பு (பின் பக்க அட்டையில் வெளியிடுவதற்கு), ஆசிரியர் உரை அல்லது மற்றவர்களிடமிருந்து பெற்ற அணிந்துரை, வாழ்த்துரை ஆகியவற்றையும் அனுப்பவும். ஆசிரியர் உரை, அணிந்துரை, வாழ்த்துரை இவை அனைத்தும் சேர்த்து 3 பக்கங்களுக்கு மிகாமல் பார்த்துக் கொள்ளவும்.

     நூலின் தலைப்பு வாசகர்களைக் கவரும் விதத்தில் இருத்தல் அவசியம் என்பதால் இதில் கூடுதல் கவனம் செலுத்தி குறைந்தது 3 தலைப்புக்களையாவது அனுப்பவும். நூலின் தலைப்பை மாற்றவும் பதிப்பகத்துக்கு உரிமை உண்டு.

     தங்களின் கையெழுத்துப் பிரதியை நாங்கள் கணினியில் கம்போஸ் செய்து ஆப்செட் முறையில் அச்சிடுகிறோம். அச்சிடப்படும் 1200 பிரதிகளுள் 900 பிரதிகளை நாங்கள் எடுத்துக்கொண்டு, 300 பிரதிகளை தங்களுக்குத் தருகிறோம். நாங்கள் எடுத்துக் கொள்ளும் 900 பிரதிகளின் விற்பனைத் தொகை எங்களுடைய உழைப்புக்கும், விளம்பரத்திற்கும் ஈடுசெய்கிறது. இது தவிர வேறு எந்த ராயல்டி தொகையோ அல்லது அதிகப்படி பிரதிகளோ தங்களுக்கு அளிக்க இயலாது. புத்தக உரிமை முழுவதும் எங்களுடைய பதிப்பகத்துக்குத் தான் என்பதை உறுதிசெய்ய நூலின் 2ஆம் பக்கத்தில் இது பற்றிய அறிவிப்பு வெளியிடப்படும்.

     தங்கள் நூல் வெளியிட தேர்வு செய்யப்பட்டால், அதன் பிறகு ஏறக்குறைய ஒரு மாதத்தில் நூல் அச்சிட்டு வெளியிடப்படும். உங்களுக்கும் 300 பிரதிகள் அனுப்பி வைக்கப்படும். (வெளிநாட்டு அன்பர்கள் அஞ்சல் செலவு அளிக்க வேண்டும்.)

     நூல் வெளியீட்டு விழா நடத்துவது பதிப்பகத்தின் வசதியைப் பொறுத்தது.

     தங்களுக்கு அளிக்கப்படும் 300 நூல் பிரதிகளில் நீங்கள் விருப்பப்பட்டால் நீங்கள் விரும்பும் எண்ணிக்கையிலான நூல் பிரதிகளை நாங்கள் உங்களுக்காக விற்று தரவும் உதவுகிறோம். அவ்வாறு விற்கப்படும் நூலின் விலையில் 60% உங்களுக்கு அளிக்கிறோம்.

     புத்தகம் முழுவதும் விற்றுத் தீர்ந்து மறுபதிப்பு செய்யும் போதும், அச்சிடப்படும் 1200 பிரதிகளில் நாங்கள் 800 பிரதிகளை எங்கள் செலவீனங்களுக்காக எடுத்துக் கொண்டு உங்களுக்கு மீதியுள்ள 400 பிரதிகளை அளிக்கிறோம். அப்போதும் நீங்கள் விரும்பும் நூல் பிரதிகளை உங்களுக்காக விற்று அவற்றின் விலையில் 60% உங்களுக்கு அளிக்கிறோம்.

     இரண்டாவது பதிப்பு வெளியிடுவதாக இருந்தால் மீண்டும் ஆசிரியரிடம் பேசி முடிவு செய்த பின்னரே வெளியிடப்படும். ஆசிரியர் விருப்பப்பட்டால் எங்கள் பதிப்பகம் மூலம் வெளியிடலாம். இல்லையேல் தம் விருப்பம் போல் பிற பதிப்பகம் மூலமும் வெளியிட்டுக் கொள்ளலாம். மேலே நிபந்தனைகளில் குறிப்பிடப்பட்டுள்ள "உரிமை: பதிப்பகத்தார்க்கே" என்பது நூலின் அந்தந்த பதிப்பிற்கு மட்டுமே பொருந்தும்.

     உங்களுக்கு நூல் வெளியிடு குறித்து மேலே சொல்லபட்ட அனைத்து நிபந்தனைகளும் உடன்பாடாக இருந்து, உங்கள் நூலை எங்கள் பதிப்பகம் மூலம் வெளியிட விரும்பினால், நூல் பற்றிய சிறு குறிப்பை முதலில் அனுப்பி வைக்கவும். அது எங்களுக்கு பிடித்திருந்தால் பின்னர் முழு நூலின் பிரதியையும் அனுப்பி வைக்கவும். எமது குழுவினரால் நூல் வெளியிட தேர்வானதும், உங்கள் நூலை எங்கள் பதிப்பகம் மூலம் வெளியிடுவதற்கு முழு உரிமையும் அளிப்பதற்கான உங்களின் ஒப்புதல் உறுதிமொழி கடிதத்தையும் ஆசிரியர் குறிப்பு, ஆசிரியர் புகைப்படம், ஆசிரியர் உரை, வாழ்த்துரை, அணிந்துரை ஆகியவற்றையும் இணைத்து எங்களுக்கு அனுப்பவும்.

குறிப்பு: எமது குழுவினரால் முழு நூலும் படித்துப் பார்க்கப்பட்டு அச்சிட தேர்வானதாக தங்களுக்கு கடிதம் வரும் வரையில், நூல் வெளியிடுவதற்கான எந்த உத்திரவாதத்தையும் பதிப்பகம் அளிக்க இயலாது. தாங்கள் முதலில் அனுப்பும் ஒரு பக்க நூல் பற்றிய குறிப்பு எங்களுக்கு பிடித்திருந்தாலும், தாங்கள் பிறகு அனுப்பும் முழு நூலும் எமது குழுவினரால் தேர்ந்தெடுக்கப்பட்டால் மட்டுமே பதிப்பிக்க இயலும். தயவு செய்து முழு நூலையும் தாங்களாகவே எங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டாம்.

மேலும் விபரங்களுக்கு

கோ.சந்திரசேகரன்,
கௌதம் பதிப்பகம்,
எண். 2, சத்யவதி நகர் முதல் தெரு,
பாடி, சென்னை - 600 050.
தொலைபேசி: +91-96888-29900, 94440-86888, 98947-62888, 90422-76544
மின்னஞ்சல்: admin@gowthampathippagam.com

அன்புடன்
கோ.சந்திரசேகரன்





எமது நூல்கள்


எமது வலைதளங்கள்
சென்னைநூலகம் சமையல்அறை தமிழ்திரைஉலகம் இன்பசுற்றுலா சிறுவர்உலகம் வாவ்கிரிக்கெட் இந்தியாஇன்போலைப்ரரி சென்னைநெட்வொர்க் கோவைநெட்வொர்க் மதுரைநெட்வொர்க் திருச்சிநெட்வொர்க் நெல்லைநெட்வொர்க் சேலம்நெட்வொர்க்

 
எமது குறுந்தகடுகள்